பொன்னியின் செல்வன் பட குழு தற்போது பிரமோஷனுக்காக மும்பை சென்றுள்ளது. அங்கு பொன்னி நதி பாடலை பாடிக்கொண்டிருந்த ஏஆர் ரகுமானை பாட விடாமல் சிரிப்பு காட்டிக் கொண்டிருந்த விக்ரமின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படத்திலிருந்து மொத்தம் ஆறு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. பொன்னி நதி, சோழா சோழா, தேவராளன் ஆட்டம், அலைகடல் சொல், ராட்சச மாமனே என்ற ஆறு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக பட குழுவினர் ஒவ்வொரு ஊராகச் சென்று மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரமோஷன் பணிகளை முடித்த பொன்னியின் செல்வன் பட குழு தற்போது மும்பையில் ப்ரமோஷன் செய்து வருகிறது. நாளை டெல்லியில் பிரமோஷனை நிறைவு செய்ய இருக்கிறது.
படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளிலும் படத்தின் டிக்கெட் விற்பனை சூடு பிடித்துள்ளது. தற்போது மும்பைக்குச் சென்றுள்ள ஏ ஆர் ரகுமான் பொன்னி நதி பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். அவரை பாட விடாமல் விக்ரம் குறும்புத்தனங்களை செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஏ ஆர் ரகுமான் பாட முடியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7