ஐஸ்வர்யாராயின் காதில் விக்ரம் ஏதோ சொல்ல அதற்கு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, திரிஷா நடிகர் கார்த்திக் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் இரண்டாம் பாகம் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதத்திற்குள் வெளியாகும் என்று மணிரத்னம் சமீபத்தில் அறிவித்திருந்தார். படம் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் படத்திற்கான பிரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது புரமோஷன் பணிகளுக்காக ஊர் ஊராக சுற்றி வருகின்றனர் பொன்னியின் செல்வன் டீம். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவில் ப்ரோமோஷன் பணிகளை முடித்த அவர்கள், நேற்று ஹைதராபாத்துக்கு சென்றனர். மேலும் நாளை மும்பைக்கும், நாளை மறுநாள் டெல்லிக்கும் செல்ல இருக்கின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போதைய இணைய காலத்தில் பிரமோஷன் செய்யாவிட்டால் படங்கள் சரியாக ஓடுவதில்லை. எனவே எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஹைதராபாத்துக்கு சென்றபோது அங்கு ஐஸ்வர்யாராயும் ப்ரமோஷன் பணிகளுக்காக வந்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார். அங்கு ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த விக்ரம் ஐஸ்வர்யாராயின் காதில் ஏதோ ஜோக் சொல்ல ஐஸ்வர்யாராய் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் என்றைக்குமே உலக அழகி தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண… Watch the below video..
YouTube Video Code Embed Credits: Andhra Culture