வெகு நாளைக்குப் பிறகு உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் தான் விக்ரம். மூன்று ஆண்டுகளுக்குப் பின் படம் வெளியாக உளளதால் கமல் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலுடன் இணைந்து ஃபகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற முண்ணனி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பில் வெளியான பத்தல பத்தல என்ற பாடல் கூட சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது. நடிகர் சூர்யா கூட சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் வருகிற ஜூன் 3 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார் கமலஹாசன். தற்போது படம் வெளியாவது குறித்து புது சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது. விக்ரம் படம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவர் கூறியுள்ளதாவது,
அதிகாலை சிறப்புக் காட்சிகள் என்ற பெயரில் பொது மக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த கொள்ளையடிக்கும் பணத்தால் வரி ஏய்ப்பு நடைபெறுகிறது இதனால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாகவே கமல் படம் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பிக் கொண்டே இருக்கும். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று பகிரங்கமாக கூறினார் கமல். தற்போது விக்ரம் படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கலால் சிறப்பு காட்சிகள் இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் கூட போகலாம். இதனால் கமலின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.