“உயர்ந்து நிற்கும் விக்ரம் படம் “!!துபாயிலுள்ள “புர்ஜ் கலீபா” கட்டிடத்தில் திரையிடப்பட்டுள்ள ட்ரைலர்.

வெளியிட்டது

நடிகர் கமல் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாரிக்குள்ள திரைப்படம் “விக்ரம்”. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என பலர் நடித்துள்ள இந்த படம் தான் தமிழில் இப்பொது மிகவும் எதிர்ப்பார்க்க படம் ஆகும். நாளை வெளியாகவுள்ள படத்திற்கு படக்குழு பல்வேறு ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகிறது. குறிப்பாக 4 வருடங்கள் பின் தா தன்னுடைய ஒரு படம் வெளிவருவதால் நடிகர் கமல் சுழன்றடித்து அனைத்து வகையுலும் ப்ரமோட் செய்து வருகிறார்.

"உயர்ந்து நிற்கும் விக்ரம் படம் "!!துபாயிலுள்ள "புர்ஜ் கலீபா" கட்டிடத்தில் திரையிடப்பட்டுள்ள ட்ரைலர். 1

வெளிநாடுகளில் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், கனடா, துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எப்போதும் பெரிய நடிகர்களின் படங்கள் பெரிய ஓப்பனிங்கை பெரும். படம் நன்றாக இருந்தால் வசூலை வாரி குவித்து விடும். பல ஆண்டுகளாக கமர்சியல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கமல் இப்பொது  மீண்டும் அந்த ஃபார்மட்டிற்கு திரும்பி உள்ளதால், அவருடைய ரசிகர்களும் போது சினிமா ரசிகர்களும் இந்த படத்தின் மீது அதிக எதிரப்பரப்பில் உள்ளனர்.

அதற்கு சான்று படத்திலிருந்து வெளியான பாடல்களும், ட்ரைலரும் பெற்ற வரவேற்பே. குறிப்பாக கமல் எழுதி, பாடியுள்ள தரலோக்கல் பாடலான “பத்தல பத்தல” பாடல் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளனர். அது மட்டுமின்றி “நான் எங்கும் திரைப்படம் குறித்து படிக்கவில்லை, இவருடைய படங்களை பார்த்தே கற்றுக்கொண்டேன்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “கைதி” படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது வாங்கிய போது, விருதினை கொடுத்த கமலிடம் கூறியிருந்தார்.

இதனால் இவர் கமலுக்காக ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என படத்தில் பணியாட்றியுள்ள பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் என இருபெரும் இந்த தலைமுறையின் சிறந்த நடிகர்கள் நடிப்பிற்கு உதாரணமாக இருக்கும் கமலுடன் இணைந்துள்ளதாலும், படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி, அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கும் சூர்யா என நிறைய நட்சத்திரப்பட்டாளங்கள் உள்ளத்தாலும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிக பெரிய ஆர்வம் உண்டாகியுள்ளது.

2 நாட்கள் முன்பு ஓபன் செய்யப்பட்ட படத்தின் புக்கிங் நிறைய இடங்களில் ஒரு வாரத்திற்கு முற்றிலுமாக விற்று தீந்துள்ளது, படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. அடுத்தடுத்து படங்கள் விஜயுடனும், சூர்யாவுடனும் மீண்டும் கமலுடனும் இணைய உள்ள லோகேஷ் ஏற்கனவே பெற்ற வெற்றிகள் போல இந்த படத்திலும் நல்ல வெற்றியை பெற்று ரசிகர்களை திருப்திப்படுத்துவர் என பலரும் படத்தை எதிர்ப்பர்த்துள்ளார்.

இந்நிலையில் ப்ரோமோஷன் பணிகளுக்காக துபாய் சென்றுள்ள கமல், படத்தின் மற்றொரு ட்ரைலரை துபாயிலுள்ள உலகின் மிக பெரிய கட்டிடமான “புர்ஜ் கலீபா” கட்டிடத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்க அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், சதிஷ் ஆர்ட் டிரெக்ஷனில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். “ராஜ் கமல் பிலிம்ஸ்” தயாரித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். தமிழ் மட்டுமின்றி படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் “மேஜர்”, மலையாளத்தில் நிவின் பாலியின்  “துறைமுகம்” , ஹிந்தியில் அக்ஷய் குமாரின் “பிரித்விராஜ்” என படங்கள் வெளியாகும் பட்சத்திலும் “விக்ரம்” படத்திற்கு பெரிய எதிர்ப்பரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்