பிக்பாஸ் டைட்டிலை வென்ற அசீமையும் அவருக்கு சப்போர்ட் செய்து வரும் தனலட்சுமி மற்றும் மணியையும் தவிர்த்து விட்டு மற்ற அனைவரும் ரி யூனியன் செய்து இருப்பதே தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களை விக்ரமன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது 105 நாட்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விக்ரமன் தான் உண்மையான வின்னர் என்று அறம் வெல்லும் என்றும் ஹேஷ்டேக்குகளைப் போட்டு நெட்டிசன்கள் இணையத்தையே கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிக்பாஸில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவரும் ஆங்காங்கே சந்தித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது விக்ரமன், ஷிவின், ராம், ஏடிகே, அசல் கோளாறு, ரட்சிதா, ஷெரினா அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இது அசீம் மற்றும் தனலட்சுமி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்தது. அவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு மற்ற அனைவரும் விக்ரமின் பின்னால் கைகோர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிடி ஒருமுறை உள்ளே வந்தபோது அதைத்தான் சொன்னார். உங்களை மெதுவாக புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள் என்று டிடி கூறி இருந்ததை பல ரசிகர்களும் தற்போது நினைவு படுத்தி இருக்கின்றனர். விக்ரமனையை தற்போது புரிந்து கொண்டு போட்டியாளர்கள் அவருக்கு பின்னால் அணிவகுப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்பு ராம் வீட்டில் நடந்திருக்கிறது. இதில் தனலட்சுமி, மணிகண்டன், ஜி பி முத்து, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, நிவாஸினி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அசீம் அழைக்கப்படவே இல்லை. விரைவில் நல்ல அப்டேட் உடன் வருவதாக வீடியோவை வெளியிட்டு புதிய அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார் விக்ரமன்.
இந்த சந்திப்புக்கு பின்னர் விக்ரமன் ஒரு வீடியோவை வெளியிட்ட அந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார். ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டுக்காக நாங்கள் மீண்டும் ஒன்று கூடினோம். அந்த வேலை முடிந்து விட்டது விரைவில் மற்ற பணிகளை முடித்துவிட்டு அப்டேட் கொடுக்கிறோம் என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது விக்ரமனை புரிந்து கொள்ளாத பலரும் தற்போது அவரை புரிந்து கொண்டு அவர் பின்னால் அணிவகுப்பதாகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O