பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் வீடியோவை விக்ரமன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் நிறைவடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல்வாதி ஒருவரை போட்டியாளராக களம் இறக்கி இருந்தது பிக்பாஸ். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இறுதியாக ஐந்து பேர் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அமுதவாணன் 11,75,000 உடன் வெளியேற மீதம் மைனாவை மிட் வீக் எவிக்க்ஷன் என்கிற பெயரில் எலிமினேட் செய்து வெளியே அனுப்பி இருந்தது பிக்பாஸ். பின்னர் அசீம், ஷிவின், விக்ரமன் என மூன்று பேர் மட்டுமே போட்டியில் இருந்தனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிகழ்ச்சியில் முடியும் ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே எகிறி இருந்தது. அதன்படி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ரிசல்ட்டை பொதுமக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஷிவின் திருநங்கை என்பதால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்தான் வெற்றியாளராக ஆகி இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தனர். மேலும் தொடர்ந்து சக போட்டியாளர்களை மதிக்காமல் பேசிக் கொண்டிருந்த அசீமுக்கு எவ்வாறு டைட்டில் வழங்கலாம்? கமலஹாசனே கனத்த இதயத்துடன் தான் இந்த டைட்டிலை கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் கருத்துக்கள் வேகமாக பரவத் தொடங்கியது. அமைதியாகவும் சக மனிதரை மதித்தும் விளையாடி வந்த விக்ரமன் தான் டைட்டில் வென்றிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விக்ரமனுக்கு திடீரென இணையத்தில் ஆதரவு பெருக தொடங்கியது. விக்ரமன் தான் உண்மையான டைட்டில் வின்னர் என்றும், அசீமிற்கு டைட்டில் பெற தகுதி இல்லை என்றும் கமெண்ட்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் விக்ரமன் தற்போது முதல் முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட எனக்கு தெரியவில்லை. வெளியில் வந்து பார்த்தபோது எனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஒரு கோலத்தில் கூட “அறம் வெல்லும்” என்று எழுதி இருக்கிறார்கள் என்றால், எனக்கு நீங்கள் கொடுக்கும் அன்பை பார்த்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன். அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று விக்ரமன் தற்போது கூறி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழே நீங்கள் தான் உண்மையான டைட்டில் வின்னர், மக்களின் மனதை எல்லாம் வென்று விட்டீர்கள் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O