தற்போது வரை பல ரசிகர்களுக்கும் படத்தில் வரும் வில்லன்கள் மீது தனி கோவம் இருக்கும். அது நடிப்பு என்பதை தாண்டியும் அவர்கள் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு இருக்கும். அந்தளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர் நடிகர்கள். தற்போது இப்படி மக்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகரிடம் வில்லன் நடிகர் அடிவாங்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் கடந்த 18ஆம் தேதி லவ் ரெட்டி என்ற படம் வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.இப்படத்தில் வில்லனாக என்டி ராமசாமி நடித்து இருந்தார்.
இந்நிலையில் படக்குழு திரையரங்கில் ரசிகர்களை சந்திக்க வந்த நிலையில், அதில் இருந்த ரசிகை ஒருவர் வில்லன் நடிகரை தாக்கி உள்ளார். அவர் படத்தில் வில்லத்தனமான நடித்ததால் அவர் மீது எழுந்த கோவத்தில் அவரை தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.