நடிகர் விமல் நடிக்கும் குலசாமி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வசனம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் மீனாட்சி சுந்தரம் என்கிற கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் விமல். அவர் இதற்கு முன்பாக பல துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தபோதிலும் பசங்க படத்திற்கு பின்னர் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் கேலக்ஸி ஸ்டார் எனவும் அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சமீப காலமாக விமலின் படங்கள் சரியாக ஓடாத காரணத்தினால் சில காலம் சீரிஸ் பக்கம் கூட திரும்பி இருந்தார் விமல். இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் மீண்டும் திரைத்துறைக்கு ஒரு கம் பேக் கொடுத்து இருக்கிறார் விமல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கைவசம் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சக்குடை, குலசாமி, லக்கி, துடிகரங்கள், தெய்வமச்சான் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய படங்கள் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இதில் குல சாமி படம் வருகிற 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார். மேலும் போஸ் வெங்கட், மகாநதி சங்கர், வினோதினி, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.இந்த படத்தை பில்லா பாண்டி, நாயகன் போன்ற படங்களை இயக்கிய சரவண சக்தி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனங்கள் எழுதி இருப்பதால் படத்திற்கான எதிர்பார்த்து அதிகமாக இருக்கிறது. எம் ஐ கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பின்னணி பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் குற்ற செயல்களில் ஈடுபட்ட பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுத்தவர். இவரது கதை தான் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற பெயரில் படமாக வந்திருந்தது. தற்போது இவரும் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: MRT Music.