நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விருமன், இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெள்ளிக் கிழமை வெளியானதால் அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால், வசுலை குவித்து உள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் கதாநாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைர காப்பு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து கார்த்தி இரண்டாவதாக கை கோர்த்து உள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார். அதிதிக்கு இது முதல் படமாகும். முதல் படத்திலேயே பல ரசிகர்களை பெற்று இருக்கிறார் அதிதி.

இதன் வெற்றி விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து இருந்தவர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ஆவார். இவர் இந்த வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் கதாநாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைர காப்பு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.
நடிகர் சூர்யா ஏற்கனவே விக்ரம் படத்திற்காக ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசாக பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் விருமன் படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றார் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைராலகி வருகிறது.