Categories: சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் மீண்டும் நாயகனாக மிரட்டும் விருந்து படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நாயகனாக ஜொலித்தவர் அர்ஜுன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே 90களில் இருந்தது. பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறார் அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ஏழுமலை படம் இன்றளவு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. இப்படி கதாநாயகனாக கலக்கி வந்த இவர் தற்போது வில்லனாக நடித்துவருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜுன் மீண்டும் நாயகனாக மிரட்டும் விருந்து படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

தற்போது இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்து உள்ளார். விருந்து என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடித்து உள்ளார். ரத்தீஷ் வேகா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தினை எதிர்பார்த்து காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

Embed Video Credits : REACH MUSIC

வெளியிட்டது

புதிய செய்திகள்