“மேனேஜர் கிட்ட கூட பேசுனேன் அப்பகூட என்னால அஜித் கிட்ட பேசமுடில – விஷால்”!!

வெளியிட்டது

நடிகர் சங்க செயலாளர், நாயகன் , தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளில் நடிகர் விஷால் அடுத்தடுத்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று இவர் அறிவித்து பல்வேறு இன்னல்களில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சங்கம் கட்டிடம் எப்போது முடிக்கப்படும், இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை. சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம்.

"மேனேஜர் கிட்ட கூட பேசுனேன் அப்பகூட என்னால அஜித் கிட்ட பேசமுடில - விஷால்"!! 1

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் ஆரம்பக்கட்டங்களில் விஷால் நடிப்பில் வெளியான “சண்டக்கோழி. திமிரு, தாமிரபரணி” போன்ற படங்கள் வரிசையாக வெற்றிகளை குவித்தன. தமிழை தாண்டி இவை தெலுங்கிலும் மிக பெரிய வெற்றி பெற படங்களாகும். அதன் முழ தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டை இன்றளவும் வைத்துள்ளார் விஷால். அவ்வப்போது தமிழக அரசியலை தலைகாட்டி வருகிறார்.

அவர் பேட்டி ஒன்றில் பேசும் பொது, நடிகர்கள் குறித்து அவருடன் கேட்கப்பட்டது. அப்போது அஜித்தின் புகைப்படம் காட்டப்பட்டபோது, “சுத்தமா மீட் பண்ணவே முடிலங்க..அவரோட மேனேஜர் கூட பேசிப்பாத்துட்டேன்..ஆனாலும் அவர் கிட்ட மீட் பண்ண முடில” என போட்டு உண்மையை வெளிப்படையாக பேசினார். அந்த விடியோவை நீங்களும் காண…

Video Courtesy – CinemaVikatan

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்