Categories: சினிமா

“வீட்ல பாத்த எந்த பொண்ணும் செட்டாகல…..நமக்கு லவ் மேரேஜ் தான்….அந்த பொண்ணு” – விஷால்”!!

வெளியிட்டது

நடிகர் சங்க செயலாளர், நாயகன் , தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளில் நடிகர் விஷால் அடுத்தடுத்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று இவர் அறிவித்து பல்வேறு இன்னல்களில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சங்கம் கட்டிடம் எப்போது முடிக்கப்படும், இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை. சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம்.

"வீட்ல பாத்த எந்த பொண்ணும் செட்டாகல.....நமக்கு லவ் மேரேஜ் தான்....அந்த பொண்ணு" - விஷால்"!! 1

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் ஆரம்பக்கட்டங்களில் விஷால் நடிப்பில் வெளியான “சண்டக்கோழி. திமிரு, தாமிரபரணி” போன்ற படங்கள் வரிசையாக வெற்றிகளை குவித்தன. தமிழை தாண்டி இவை தெலுங்கிலும் மிக பெரிய வெற்றி பெற படங்களாகும். அதன் முழ தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டை இன்றளவும் வைத்துள்ளார் விஷால். அவ்வப்போது தமிழக அரசியலை தலைகாட்டி வருகிறார்.

தமிழ் முன்னணி நடிகர் இவருக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும் இன்றளவும் திருமணம் தடைபட்டுக்கொண்டே போகுது. கடந்த 2019ம் ஆண்டு விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த ஆறு மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.திருமணம் நின்று போன பிறகு கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். வயது ஏறிக் கொண்டே போகிறதே ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. விஷால் கூறியிருப்பதாவது,அப்பா, அம்மா பார்த்து செய்து வைக்கும் திருமணத்துல நான் செட் ஆவேனா என தெரியவில்லை. உங்களிடம் ஏன் பொய் சொல்லணும். ஆமாம், லவ் பண்றேன். இந்த செய்தி இப்பொது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனா இப்போதைக்கு அந்த பொண்ண பத்தி கூற முடியாது, விரைவில் கூறுகிறேன்” என பதிலளித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்