Categories: சினிமா

எனக்கு கதை பிடிக்கலைன்னா இயக்குனர ரூமுக்கு கூட்டிட்டு போய் நொங்கிடுவேன் – விஷால் பேச்சு

வெளியிட்டது

எனக்கு கதை பிடிக்காவிட்டால் இயக்குனரை அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு கும்மி விடுவேன் என்று நடிகர் விஷால் பேசி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சென்னையில் லத்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது. அதில் நடிகர் விஷால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலரையும் வெளியிட்டனர். பின்னர் பேசிய விஷால் லத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4மொழிகளில் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்தார். ஒரு வாரம் கழித்து இந்தியில் வெளியாகும் என்று அவர் பேசினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு கதை பிடிக்கலைன்னா இயக்குனர ரூமுக்கு கூட்டிட்டு போய் நொங்கிடுவேன் - விஷால் பேச்சு 1
தொடர்ந்து பேசிய அவர் மேடையில் உள்ள அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் யாருக்கும் பூங்கொத்து கொடுக்காமல் சேமித்த பணத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பிற்காக அந்த பணத்தை கொடுத்து விட்டதாக கூறினார். மேலும் லோகேஷ் மீது பொறாமையாக இருப்பதாகவும் அவர் தளபதி விஜய் வைத்து படம் இயக்கிவிட்டார். எனக்கும் விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசையாக உள்ளது. 18 வருடங்கள் வாங்கிய அடியை ஒரே படத்தில் வாங்கி விட்டேன். தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டும் படம் பண்ணுவேன். இல்லையென்றால் இயக்குனரை தனியாக ரூமுக்கு அழைத்துச் சென்று குமுறுவேன் என்று பேசி இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று குரல் கொடுக்க, விஷால் நான் புரட்சி தளபதி கிடையாது வெறும் விஷால் என்று ரசிகரை அதட்டும் தொணியில் பேசினார்.


சமீப காலமாக விஷாலுக்கு எந்த படங்களும் சரியாக அமையவில்லை. குறிப்பாக அவர் புரட்சி தளபதி என்று பட்டம் போட்டுக் கொண்ட பிறகு அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. எனவே இனிமேல் தன்னை யாரும் புரட்சி தளபதி என்று அழைக்க வேண்டாம், தளபதி என்றால் அது ஒருவர்தான் என்ற ரீதியில் அவர் இன்று பேசியிருக்கும் காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்