Categories: சினிமா

யாரு வேணாலும் போலீஸ் கெட்டப் போடலாம்..ஆனா நிஜ போலீஸ் மாறியே இருப்பது நம்ம விஷால் தான்

வெளியிட்டது

விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் லத்தி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விஷாலின் முந்தைய படங்களில் இருந்து இந்த படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் லத்தி. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்கனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த படம் எடுக்கப்பட்டு வந்தது. நடிகர் விஷாலைப் பொறுத்தவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்திலும் உயர்ந்த பொறுப்பில் உள்ளார்.

யாரு வேணாலும் போலீஸ் கெட்டப் போடலாம்..ஆனா நிஜ போலீஸ் மாறியே இருப்பது நம்ம விஷால் தான் 1

2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். பின்னர் சண்டகோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். அரசியலுக்கு வர ஆசைப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேரமாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும். தற்போது ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லத்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படப்படிப்பு ஜனவரியில் தொடங்கியபோது விஷாலின் கையில் காயம் ஏற்ப்பட்டது. இதனால் சில நாட்கள் படபிடிப்பு ரத்தானது. கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் படபிடிப்புக்கு திரும்பினார். பின்னர் மீண்டும் விஷாலுக்கு ஏற்பட்ட விபத்தால் படத்தின் ஷூட்டிங் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

நடித்துக்கொண்டிருந்த போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சுருண்டு விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரவுடிகளை துரத்திக் கொண்டு செல்லும் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கால்களில் அடிபட்டது. இதனால் அவர் வலி தாங்கமுடியாமல் கீழே விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசரை நீங்களும் காண…Watch the below Video

Youtube Video Code Embed Credits: Vishal Film Factory

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்