அது மட்டும் நடந்து இருந்தா நாங்க செ த் து போயிருப்போம்.! விஷால் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!

வெளியிட்டது

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து தற்போது விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றனர். நூல் இழையில் நாங்கள் இருவரும் உயர் தப்பி இருக்கிறோம். கடவுளின் கருணை இல்லை என்றால் இருவரும் இந்நேரம் இறந்திருப்போம் என்றும் அவர்கள் பதிவிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தற்போது நடித்து வரும் படம் தான் மார்க் ஆண்டனி. ஆக்சன் திரைப்படங்களில் தனி முத்திரையை பதித்து வருகிறார் விஷால். ஆரம்ப காலத்தில் அமைதியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் பின்னர் அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி அடைந்தது. தொடர்ச்சியாக அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் நடந்து இருந்தா நாங்க செ த் து போயிருப்போம்.! விஷால் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.! 1
மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். கிளாசிக் கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு புதுவிதமான கெட்டப்பில் விஷால் இந்த படத்தில் நடித்து வருகிறார். இவருடன் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார். முதல் போஸ்டர் வெளியான போது இவர்கள் அனைவரின் தோற்றங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படப்பிடிப்புகள் மிக மும்முரமாக நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சண்டைக்காட்சிக்காக பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இருந்து படப்பிடிப்பிற்குள் நுழைந்தது படப்பிடிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இருக்கும் இடத்தை நோக்கி லாரி வேகமாக வந்தது.


அந்த நேரத்தில் சரியாக விஷாலை சுட்டு அவர் கீழே விழும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வேகமாக வந்த லாரியால் சுதாரித்துக் கொண்ட விஷால் சட்டென இடது புறமாக திரும்பி உயிர் தப்பினார். கொஞ்சம் இடைவெளியில் விஷாலின் கால் தப்பித்து விட்டதாக தற்போது சமூக வலைதளத்தில் அவர் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். சில நொடிகளில் சிறிது இடைவெளியில் என் வாழ்க்கையே மாறி இருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அதேபோல எஸ் ஜே சூர்யாவும் உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி, நூல் இழையில் உயர் தப்பினோம். நேராக செல்வதற்கு பதிலாக லாரி கொஞ்சம் குறுக்காக சென்று விபத்து நடந்து விட்டது. அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது ட்வீட் செய்து இருக்க மாட்டோம். கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்தோம் என்று பதிவிட்டுருக்கிறார். தொடர்ந்து விஷாலின் படப்பிடிப்புகளில் இது போன்ற விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்