Categories: சினிமா

முதல் மனைவியின் மகனை தூக்கி வைத்திருக்கும் இரண்டாவது மனைவி..விஷ்ணு விஷால் போட்ட பதிவு

வெளியிட்டது

விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படபூஜை தற்போது சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த பட பூஜைக்கு கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் போன்ற முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். பின்னர் இவர் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களில் நடித்தார். இதில் ராட்சசன் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் முதலில் ரஜினி நடராஜன் என்பவரை திருமணம் செய்து ஆரியன் என்ற மகன் இருக்கிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

முதல் மனைவியின் மகனை தூக்கி வைத்திருக்கும் இரண்டாவது மனைவி..விஷ்ணு விஷால் போட்ட பதிவு 1

இருந்த போதிலும் தன்னுடைய மகன் ஆரியனை, விஷ்ணு விஷால் கவனித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவும் ஆரியனை அவர் குழந்தை போல் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது மகன் ஆரியன் பெயரிலேயே தனது அடுத்த படம் இருக்கிறது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தலைப்பாக இருக்கும் என்று அவர் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்தப் படத்தின் படபூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து வாணி போஜன், ஷ்ரதா ஸ்ரீநாத் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பிரவீன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜைக்கு விஷ்ணு விஷாலின் மகன் ஆரியன் வந்தார். அப்போது அவர் கிளாப் போர்டு அடித்து இந்த பூஜையை தொடங்கி வைத்தார். மேலும் தந்தையின் இரண்டாவது மனைவியான ஜுவாலா கட்டவுடன் ஆரியன் மிக நெருக்கமாக இருக்கிறார். ஆரியனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இதை ஷேர் செய்த விஷ்ணு விஷால் ஆரியனுக்கும் ஜ்வாலாவிற்கும் உள்ள பாண்டிங் சில பேருக்கு மட்டுமே புரியும். ஆரியனுடன் இணைந்து படத்தை கிளாப் செய்த ஜுவாலா கட்டாவிற்கு நன்றி என்றும் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். பட பூஜை வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

YouTube Video Code Embed Credits: Vishnu Vishal Studioz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்