‘சூப்பர் ஸ்டார்’ சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் மற்றும் அமீர் கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் ‘Superstars are Superstars for a reason’ என்று கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த கேப்ஷனை ‘Stars are Stars for a reason’ மாற்றி இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையானது. முதலில் கமலஹாசன் மற்றும் அமீர் கானை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு விட்டு பின்னர் ஸ்டார் ஏன் அதை அவர் மாற்றினார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் விஷ்ணு விஷாலை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், “சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்கள் தான், அந்த பதிவை நான் மாற்றி விட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் கிடையாது, சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன், என்னுடைய பதிவில் நெகட்டிவிட்டியை பரப்புபவர்கள் இங்கிருந்து விலகி விடுங்கள், நமக்கென்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டுமே இருக்கிறது. ஆனால் என்னை பொருத்தவரையில் இங்கு சாதித்த அனைவருமே சூப்பர் ஸ்டார்கள் தான். அனைவரையும் நேசியுங்கள், அன்பை பரப்புங்கள், வெறுப்பை பரப்பாதீர்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு கீழே ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவரின் இந்த பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என்று சர்ச்சை எழுந்திருந்த நிலையில் கமல் மற்றும் அமீர் கானை சூப்பர் ஸ்டார் என முதலில் குறிப்பிட்டு விட்டு பின்னர் அவர்களை வெறும் ஸ்டார் விஷ்ணு விஷால் பதிவிட்டு இருப்பது மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.