பிக்பாஸில் இருந்து வந்த பிறகு பூர்ணிமாவிடம் பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – விஷ்ணு ஓபன் டாக்

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் விஷ்ணு முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். அவர் பிக்பாஸ் குறித்தும், அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்தும் பல கருத்துக்களை தற்போது பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது பிக் பாஸ் வீட்டில் பொய்யானவர்கள் என்று யாருமே கிடையாது. கோபம், வன்மம், சிரிப்பு, அழுகை என எல்லாமே உண்மையைத்தான் காட்டினார்கள். பிக் பாஸ் வீட்டில் பிரதீப், மாயா, தினேஷ், விசித்ரா, அர்ச்சனா ஆகிய ஐந்து பேருமே மிக வலுவான போட்டியாளர்கள். இவர்களுக்கு எப்போது ஒரு காயினை நகர்த்த வேண்டும், கார்டுகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் இருந்து வந்த பிறகு பூர்ணிமாவிடம் பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் - விஷ்ணு ஓபன் டாக் 1

பிக் பாஸ் வீட்டில் தனக்கு மணி, ரவீனா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோரைத் தான் பிடிக்கும். அர்ச்சனாவிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது. அவர் மற்றவர்களை மிகுந்த கவனிப்புடன் பார்த்துக் கொள்வார். கூல் சுரேஷும் சரியாக வழிகாட்டுவார். யாரையும் எளிதில் எடை போட மாட்டார். வாழ்க்கைக்கு தேவையான அனுபவத்தை நான் பிக் பாஸில் இருந்து தான் பெற்றேன். மேலும் பாயிண்டாக பேச வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். வெளியில் வந்த பிறகு நான் ஒரு எபிசோடு கூட பார்க்கவில்லை ஆனால் ரசிகர்கள் எடிட் செய்த கிளிப்பிங்கை மட்டுமே பார்த்தேன்.தினேஷை எனக்கு வெளியிலேயே தெரியும். அவர் ரஃப் அன்ட் டஃப் ஆன ஆள் என்று நினைத்தேன்


ஆனால் தினேஷ் பழகுவதற்கு மிக எளிமையானவர். அவரை பலரும் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு நல்ல கதை, நல்ல ஹீரோயின் கிடைத்தால் நல்ல படம் பண்ணுவேன். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் உங்களையெல்லாம் சந்திக்கிறேன். எனக்கு கனவு மற்றும் கிரஷ் என்றால் அது ரஷ்மிகா மந்தனா மற்றும் மிருனள் தாக்கூர் தான். இவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். மேலும் பூர்ணிமாவுடன் வெளியில் வந்த பிறகு பேசவில்லை. உள்ளே பல முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தது. அது எல்லாம் சரியான பின்பு அவரிடம் பேசுவேன்” என்று கூறினார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்