
விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விவேக் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டிற்கு செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது தான் கதை.
இந்த படத்தில் பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டாத இருந்தது. விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டு வருகிறார், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறினார்