VJ அர்ச்சனாவின் 41-st Birthday.! மகள் சாரா செய்த சர்ப்ரைஸை பார்த்து கண்கலங்கி அழுத அர்ச்சனா..!

வெளியிட்டது

தமிழ் சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வரும் அர்ச்சனா தற்போது தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது அவரது மகள் சாரா அவருக்கு செய்த சர்ப்ரைசை பார்த்து கண்கலங்கி அழுது இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்கிற நிகழ்ச்சியில் சிட்டி பாபு உடன் இணைந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அர்ச்சனா. ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை தொடங்கிய அவர், இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் தொலைக்காட்சியை விட்டு விலகிய அவர் தனது திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VJ அர்ச்சனாவின் 41-st Birthday.! மகள் சாரா செய்த சர்ப்ரைஸை பார்த்து கண்கலங்கி அழுத அர்ச்சனா..! 1

அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிஷ்ட லட்சுமி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .பின்னர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியுடன் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அர்ச்சனாவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். சில காலம் விஜய் டிவியில் பயணித்த அவர் தற்போது அங்கிருந்து விலகி மீண்டும் ஜீ தமிழுக்கே சென்றிருக்கிறார். தற்போது சரிகமப என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த அர்ச்சனா 2004 ஆம் ஆண்டு வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகள் இருக்கிறார். அர்ச்சனா அவரது தங்கை அனிதா மற்றும் அர்ச்சனாவின் மகள் சாரா ஆகிய மூவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் செய்வது, இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோக்கள் போடுவது என்று எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று அர்ச்சனா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது தங்கை அனிதாவும் அவரது மகள் சாராவும் இணைந்து அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருக்கின்றனர். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றும், ஆட்களை ஏற்பாடு செய்தும், நடனமாட வைத்தும், பாட்டு பாட வைத்தும்,கேக் வெட்டியும் அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸை செய்திருக்கின்றனர். இந்த சர்ப்ரைஸை பார்த்த அர்ச்சனா கண் கலங்கி அழுது இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் 41 வயதை கடந்துவிட்ட அர்ச்சனாவிற்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்