ராஜா ராணி சீசன் 2 வில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் மூலமாக முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைக்கிறார். சின்னத்திரையில் வி.ஜேவாக இருந்தவர் அர்ச்சனா. இவருக்கு முதல் முறையாக ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்ததால் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ அதே அளவிற்கு ஆதரவு அர்ச்சனாவுக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் அர்ச்சனா திடீரென ஒரு நாள் சீரியலை விட்டு விலகி இருந்தார். இன்னும் எத்தனை நாட்கள் ராஜா ராணி நாடகம் ஓடும் என்று தெரியாது, மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதால் நாடகத்தை விட்டு விலகி விட்டதாக அவர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

அவர் நாடகத்தை விட்டு விலகிய போது பிக்பாஸ் தொடங்க இருந்ததால் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதற்கு விளக்கம் அளித்து இருந்த அர்ச்சனா இன்னும் ஒரு பெரிய வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறினார். இதனால் அவர் படங்களின் நடிக்கவே ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் டிமான்டி காலனி பாகம் இரண்டில் அவர் அருள் நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் வெங்கி வேணுகோபால் இயக்கும் டிமான்டி 2 காலனி படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது் டிமான்டி காலனி முதல் பாகத்தில் இயக்குனராக அறிமுகமாகிய அஜய் ஞானமுத்து இந்த கதையை எழுதுகிறார். இதில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் நல்ல குழுவுடன் திரை உலகில் அதிகம் முகமாவது மகிழ்ச்சி என்றும் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
சீரியலில் இருந்து விலகிய உடனேயே அர்ச்சனா விற்கு முதல் படம், பெரிய இயக்குனர் மற்றும் பெரிய நடிகருடன் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அதற்காகவும் ராஜா ராணியிலிருந்து விலகி இருந்ததாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார் அர்ச்சனா. மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனா சீரியலில் இருந்து விலகிய போது அதை நினைத்து வருத்தப்பட்டனர். தற்போது அர்ச்சானவுக்கு கிடைத்திருக்கும் வெள்ளித்திரை வாய்ப்பு மூலம் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அர்ச்சனா வெள்ளித்திரையில் பெரிய ஸ்டாரக வர வேண்டும் என்று கமெண்டுகளில் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.