அவங்க எனக்கு குழந்தை மாதிரி.! ரமணியம்மாள் மறைவுக்கு முதல் ஆளாக ஓடி சென்ற விஜே அர்ச்சனா.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரின் உள்ளங்களை கவர்ந்த பாடகி ரமணியம்மாள் இறப்பிற்கு முதல் ஆளாக ஓடிச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார் விஜே அர்ச்சனா் அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரமணியம்மாள் காலமாகி இருக்கும் செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டு வேலைகளை செய்து வந்த அவர் தனது 63வது வயதில் தன்னால் பாட முடியும் என்று நிருபிப்பதற்காக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று அழைக்கப்பட்டார். இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் பாடி இரண்டாவது இடத்தை பிடித்திருந்த அவருக்கு 5 லட்ச ரூபாய் பரிசும் 5 சென்ட் நிலமும் வழங்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவங்க எனக்கு குழந்தை மாதிரி.! ரமணியம்மாள் மறைவுக்கு முதல் ஆளாக ஓடி சென்ற விஜே அர்ச்சனா.! 1
சென்னையில் பிறந்து வளர்ந்த ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து வந்தார். பின்னர் தனது பாடும் திறமையை எங்காவது காட்ட வேண்டும் என்பதற்காக கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் பாட துவங்கி இருந்தார். அவரின் இந்த பாட்டு திறமையை அறிந்த சிலர் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமப நிகழ்ச்சியில் பாடுமாறு அறிவுறுத்த அந்த போட்டியில் அவர் கலந்து கொண்டார். நாட்டுப்புற பாடல்கள், தற்கால பாடல்கள், சினிமா பாடல்கள் என அனைத்து பாடல்களையும் பாடி நடுவர்களை அசர வைத்திருந்தார் ரமணியம்மாள். இதனால் நடுவர்கள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்கிற பெயரை கொடுத்திருந்தனர். இவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது பரிசு தான் கிடைத்தது. 5 லட்ச ரூபாய் பணமும் 5 சென்ட் நிலமும் வழங்கப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் தனக்கு எதுவும் வழங்கவில்லை என்று ரமணியம்மாள் கூறியிருந்த நிலையில் பின்னர் தாமதமாக அவருக்கு அந்த நிலம் வழங்கப்பட்டது.

கடைசியாக பொம்மை நாயகி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் ரமணியம்மாள். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் யோகி பாபு மற்றும் பா.ரஞ்சித்தை புகழ்ந்து பேசி இருந்தார். இதுவே அவரது கடைசி பேச்சாகும். இந்த நிலையில் நேற்று தூக்கத்திலேயே ரமணியம்மாளின் உயிர் பிரிந்து இருக்கிறது. அவருக்கு வயது 69. அவரது மறைவு செய்தி கேட்டு பலரும் சோகத்தில் உறைந்திருந்த நிலையில், விஜே அர்ச்சனா முதல் ஆளாக ஓடிச் சென்று ரமணியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது ரமணியம்மாளை அறிமுகப்படுத்தியது எப்படி? அவர் சிங்கப்பூரில் பவுன்சர்களுடன் எப்படி வலம் வந்தார் என்பது குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இன்ஸ்டாகிராமில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார் விஜே அர்ச்சனா. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: AMN TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்