எங்க அம்மா பேரு கெட்டு போனதுக்கு காரணம் பிக்பாஸ் தான்.. கடுமையாக விமர்சித்த அர்ச்சனா மகள் சாரா

வெளியிட்டது

பிக்பாஸால் தான் தனது தாயார் பெயர் கெட்டு விட்டதாக விஜே அர்ச்சனாவின் மகள் சாரா தற்போது ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார். சாட்டிலைட் சேனல்கள் தொடங்கிய காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருபவர்களில் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். அன்று தொடங்கி இன்று வரை சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஆங்கரிங் செய்து வருகிறார். இவர் கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் இவரை வெறுப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா எதார்த்தமாக இருந்த போதிலும் இவர் நடிப்பதாக பலரும் கூறினர். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

எங்க அம்மா பேரு கெட்டு போனதுக்கு காரணம் பிக்பாஸ் தான்.. கடுமையாக விமர்சித்த அர்ச்சனா மகள் சாரா 1

 

மேலும் பிக்பாஸில் இருக்கும்போது, அன்பு ஜெயிக்கும் என்று நீ நம்புறியா? என்று கேட்டது மிகப் பிரபலம் ஆனது. அன்றிலிருந்து இவரை ‘அன்பு கேங்’ என்று நெட்டிசன்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் சில காலம் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து வந்த அர்ச்சனா, தற்போது மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்திருந்தார். அப்போதே இது குறித்து பல தகவல்கள் பரப்பப்பட்டன. விஜய் டிவியும் ஜீ தமிழும் போட்டி தொலைக்காட்சி என்பதால் இங்கு பணிபுரிபவர்கள் அங்கு பணிபுரிய முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. இதனால் அர்ச்சனாவை மிக கஷ்டப்பட்டு இழுத்து வந்தது விஜய் டிவி. பிக்பாஸ் ஆரம்பித்து சில நாட்கள் சென்ற பிறகு தான் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

 

பிக்பாஸில் அவருக்கு கெட்ட பெயரை கிடைத்தது. இதனால் பாதியிலேயே வீட்டை விட்டு வெளியேறினார் அர்ச்சனா. பின்னர் அவர் ஒரு youtube சேனலை தொடங்கி தனது மகளுடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே ஜீ தமிழில் ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய போது சாரா தன் வயதுக்கு அதிகமாக பேசுகிறார் என்று நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வந்தனர். இந்த நிலையில் தனது youtube சேனலில் அவர்கள் இருவரும் சேர்ந்து பாத்ரூம் டூர் என்ற ஒரு வீடியோவை போட அது இன்னும் வைரலானது.சாராவையும் அர்ச்சனாவையும் நெட்டிசன்கள் மேலும் திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். தற்போது சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்திருந்த நிலையில், அர்ச்சனா திடீரென விஜய் டிவியை விட்டு விலகி ஜீ தமிழில் மீண்டும் தனது மகளுடன் சூப்பர்மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போதைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அர்ச்சனாவின் மகள் சாரா தனது தாய் பிக்பாஸ் சென்றதே தனக்கு பிடிக்கவில்லை என்றும், நாங்கள்தான் அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் உள்ளே அவரை வேறுவிதமாக காட்டினார்கள். அவர் எதார்த்தமாக இருந்ததை வேறு விதமாக காட்டி அவர் பெயரை கெடுத்து விட்டார்கள் என்ற ரீதியில் பேசினார். மேலும் 40 நிமிடங்களில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தனது தாயைக் காட்டினார்கள், அதை வைத்து அவரை நீங்கள் யாரும் எடை போட்டு விட முடியாது என்றும் பேசினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்