விஜய் டிவியில் இருந்து விலகி குஷ்புவுடன் வேறு டிவியில் இணைந்த அர்ச்சனா, வெளியான ப்ரோமோ

வெளியிட்டது

தனியார் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக ஆங்கரிங் செய்து வரும் ஒரு நபர்தான் அர்ச்சனா. இவர் 90களில் சேட்டிலைட் சேனல்கள் தொடங்கப்பட்டபோது, அன்று முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆரம்பத்தில் காமெடி டைம் என்று நிகழ்ச்சியை சிட்டிபாபு உடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின்னர் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த அர்ச்சனா, சமீபத்தில் விஜய் டிவியில் இணைந்தார். விஜய் டிவியின் போட்டி தொலைக்காட்சியான ஜீ தமிழில் பணியாற்றி வந்த இவரை, பிக்பாஸ் என்ற நிகழ்ச்சிக்காக கொக்கி போட்டு இழுத்து வந்தது விஜய் டிவி. ஆனால் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இணைந்து இருக்கிறார் அர்ச்சனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் இருந்து விலகி குஷ்புவுடன் வேறு டிவியில் இணைந்த அர்ச்சனா, வெளியான ப்ரோமோ 1

அர்ச்சனா ஒரு தனித்துவமான நிகழ்ச்சி தொகுப்பாளர். தன்னை தாழ்த்திக் கொண்டு பலரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர். இதை பல மேடைகளில் பலரும் மேற்கோள் காட்டி பேசி இருக்கின்றனர். அவருக்கு சாரா என்ற மகளும் உண்டு. அவரும் தனது தாயுடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் குறிப்பாக சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அவர் வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி மிகுந்த சர்ச்சையானது. சாரா தனது வயதிற்கு மீறி அதிகமாக பேசுகிறார் என்று அவரை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இதற்கு அர்ச்சனா மற்றும் சாரா இருவருமே விளக்கம் கொடுத்து வந்த போதிலும், இணையவாசிகள் இருவரையும் கலாய்த்து தள்ளினர். குறிப்பாக அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் அவர்கள் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

 

அதன் பின்னர் எந்த சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தொகுப்பாளினி அர்ச்சனா விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதேபோல தற்போது சூப்பர் மாம் சீசன் 3 என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் ஒளிபரப்பை இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மீண்டும் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below Video..

YouTube Video Code Embed Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்