சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்..! புதிய ஆதாரங்களை காட்டி சித்ரா தாயார் பரபரப்பு பேட்டி | VJ Chitra

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் VJ சித்ரா. குடும்ப பாங்கான இந்த அண்ணன் தம்பி கதையில் ஒரு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து பல பேரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார் சித்ரா. கதிர் – முல்லை கதாபாத்திரத்தை ரசிக்கவே அந்த நாடகத்தை பல பேர் பார்த்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்ட சித்ரா திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று செய்திகள் பரவியது.

சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்..! புதிய ஆதாரங்களை காட்டி சித்ரா தாயார் பரபரப்பு பேட்டி | VJ Chitra 1

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சித்ரா கோழை இல்லை, தனி ஒரு பெண்ணாக இருந்து உழைத்து சம்பாதித்து வீடு, கார் என வாங்கியவர் சித்ரா, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சித்ராவை அவரது வருங்கால கணவர் அடித்தே கொன்றுவிட்டார் என்று சித்ராவின் பெற்றோர்கள் கூறிவந்தனர். சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. சித்ரா ஷூட்டிங் முடிந்து ஒரு நாள் ஹேமந்த்துடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். அன்று இரவுதான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் பரவியது. Youtube Video Code Embed Credits: Behindwoods 

 

ஆனால் தற்போது சித்ராவின் பெற்றோர்கள் தற்போது திடீர் திருப்பமாக புதிய புகைப்பட ஆதாராத்தை வெளியிட்டுள்ளனர். அதில் சித்ராவின் கழுத்துப் பகுதியில் பல்லால் கடித்த தடயமும், நகங்களால் கீறிய தடயமும் உள்ளது. சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை அடித்து கொன்றுவிட்டார் என்று அவர்கள் கதறி அழுதனர். ஏற்கனவே ஹேமந்த் ஒரு பேட்டியில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், இதில் சில அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறியிருந்தார். தற்போது சித்ராவின் பெற்றோர்கள் கழுத்தில் கடித்த காயத்தை காட்டி பிரச்சினையை கிளப்பியுள்ளதால் இந்த பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியுள்ளது. Watch the Video Below..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்