சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி தான் அசத்தப்போவது யாரு. இது இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்னோடி. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி வந்த பிறகுதான் பல தொலைக்காட்சிகள் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலர் இன்று வெள்ளித்திரை வரை சென்று கலக்கி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகை இல்லை. அந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர் தான் விஜே மகேஸ்வரி. 16 வருடமாக தொலைக்காட்சிளில் இருக்கும் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சன்டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் சீரியல்களிலும் வெள்ளித்திரைகளிலும் நடிக்க தொடங்கினார். திருமணமான பின்பு சீரியலை விட்டு விலகிய அவர், தனது கணவருடன் விவாகரத்து ஆனதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார். கணவர் வீட்டில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கண்ணீருடன் அவர் கூறினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சிறுவயதிலேயே அப்பாவை பிரிந்து அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வந்த மகேஸ்வரிக்கு, வெங்கட் என்பவருடன் திருமணம் முடிந்து கேசவ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் திருமணமான சில ஆண்டுகளில் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது போட்டோஷூட்டுகளையும் நடத்தி வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வபோது ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தன் விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தன் கணவர் வீட்டில் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறினார். பெண் நண்பர்களுடன் பேசக்கூடாது, ஆண்களுடன் இணைந்து நடிக்க கூடாது என்று பல கண்டிஷன்கள் போட்டுள்ளார். சீரியலில் நடித்தால் குடும்ப மானம் போய்விடும் என்று கூறி தன்னை வீட்டிலேயே ஒரு அடிமை போல வைத்திருந்தாகவும் மகேஸ்வரி கூறினார்.
மேலும் தந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தாய்க்கும் பண உதவி செய்ய கூடாது என்று கணவர் வீட்டில் கூறியதால், இந்த வயதிலும் தனது தாய் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டதாகவும் மகேஸ்வரி கூறினார். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு கணவரை பிரிந்துவிட்டதாக மகேஸ்வரி கூறும் போது கண்ணீர் விட்டு அழுதார். மேலும் திருமணத்தால் தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டதால், யாரும் தனக்கு வாய்ப்பு தரவில்லை, 3 வருடமாக ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வேலை தேடியதாக கூறினார். தற்போதுதான் மகேஸ்வரிக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தள்ளது. ரைட்டர் படத்தில் சமுத்திர கனிக்கு மனைவியாகவும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். Watch the below video…
Youtube Video Code Embed Credits: Avalglitz