பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் பற்றி தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. வார இறுதி நாள் என்றால் ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்கியிருக்கும் போட்டியாளரை பிக்பாஸ் வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி மகேஸ்வரி மற்றும் ராம் ராமசாமிக்கு மிகக்குறைவான ஓட்டுகளை கிடைத்துள்ளன. இதில் மகேஸ்வரி தற்போது வீட்டை விட்டு வெறியேறி இருக்கிறார். அக்டோபர் ஒன்பதாம் தேதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 6. எப்பொழுதும் 16 போட்டியாளர்கள் அல்லது 18 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, முதல் முறையாக 21 பேரைக் கொண்டு ஆரம்பித்தனர். வழக்கம் போல கமலஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் களை கட்டி இருக்கிறது. முதல் நாள் தொடங்கி சண்டை, சச்சரவு, அடிதடி கலாட்டா என்று வீடு நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் சீசன் 4 மற்றும் 5 எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்தவர்களே கலந்து கொண்டனர். இதனால் இந்த இரண்டு சீசனும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே ஆறாவது சீசனை மிகப்பெரிய வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் திட்டம் போட்டு பல சர்ச்சையான போட்டியாளர்களை உள்ளே இறக்கி இருக்கிறது. இந்த சீசனில் பெரும்பாலும் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இதுவரை மொத்தம் நான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. எனவே இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவார்கள். இரண்டாவது வாரம் ஜி.பி முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி வெளியேறிவிட்டார். அந்த வாரமே நடன இயக்குனர் சாந்தியையும் எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறும், நான்காவது வாரத்தில் ஷெரினாவும் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வாக்கெடுப்பு தொடங்கிய ஆரம்பம் முதலே மகேஸ்வரி கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் திடீரென ராம் ராமசாமிக்கு வாக்குகள் உயர தொடங்கியது . இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து மஹேஸ்வரி வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.