பிக்பாஸ்ஸில் கலந்துகொண்டு பிரபலமான விஜே மகேஸ்வரி தற்போது திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது விஜே மகேஸ்வரி தானா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளீர்களே என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலமாக விஜேவாக அறிமுகமானவர் மகேஸ்வரி சாணக்கியன். 16 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பின்னர் சில சீரியல்களில் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின்பு சீரியல் மற்றும் தொலைக்காட்சிகளை விட்டு முற்றிலும் விலகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் குடும்பத்தினர் தொலைக்காட்சிகளில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டதாலும், தனது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மகேஸ்வரி இருந்ததாலும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாயுடன் வசித்து வருகிறார். தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கும் மகேஸ்வரிக்கு கேசவ் என்ற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 6 செல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கிய நாள் முதலே சண்டை, சச்சரவு என இருந்து வந்தார் மகேஸ்வரி. தொடர்ந்து வீட்டில் கத்திக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்ததால் அடிக்கடி நாமினேஷனுக்கு சென்றார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார் மகேஸ்வரி.
ஆனால் மகேஸ்வரியின் வெளியேற்றம் நியாயமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் மகேஸ்வரி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மணப்பெண் கோலத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது நம்ம மகேஸ்வரியா ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O