அசீம் மாதிரி கேவலமா பேசிட்டு உள்ள இருக்கத்துக்கு வெளியே வந்தது Happy.! VJ மஹேஸ்வரி பேட்டி

வெளியிட்டது

அசீம் மாதிரி அடுத்தவர்களை கீழ்த்தரமாக நடத்திக் கொண்டும், அசிங்கமாக பேசிக் கொண்டும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதைவிட நான் வெளியே வந்தது நல்லது என்று வி.ஜே மகேஸ்வரி பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கிய இன்றுடன் 87 நாட்களில் நிறைவடைந்து இருக்கிறது. 21 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளராக இருந்து வருபவர் அசீம். இவர் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் ஒரு கட்டத்தில் சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் சக போட்டியாளர்களை ஒருமையில் வாடா போடா என்று பேசுவதும், பெண் போட்டியாளர்களை வாடி போடி என்று பேசுவதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ஆயிஷா ஒரு கட்டத்தில் செருப்பைக் கூட கழற்றி அசீமை அடிக்கச் சென்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசீம் மாதிரி கேவலமா பேசிட்டு உள்ள இருக்கத்துக்கு வெளியே வந்தது Happy.! VJ மஹேஸ்வரி பேட்டி 1
தற்போது தனது பழைய குணங்களை மாற்றிக்கொண்டு சாந்தமாக விளையாடி வருகிறார் அசீம். இருந்தபோதிலும் ஆங்காங்கே தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய விஜே மகேஸ்வரி அசீம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் பேசும் பொழுது என்னை மக்கள் குறைந்த வாக்குகள் அளித்து வெளியேற்றி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அது குறித்து தெரியாது. பிக பாஸ் வீட்டில் நேரமே இல்லை. நேரம் இருந்திருந்தால் காதல் காட்சிகள் ஓடியிருக்கும். ஆனால் எப்பொழுதும் டாஸ்க் டாஸ்க் என்று இருந்ததால் அந்த ட்ராக்கிற்கு இடமில்லாமல் போய்விட்டது என்று கூறினார். மேலும் அசீம் குறித்து பேசும் பொழுது அசீம் போல் கேவலமாக பேசினால் தான் பிக் ழபாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிலைமை இருந்தால் ,அது போன்ற நிலைமையே தமக்கு தேவையில்லை. தான் வெளியில் வந்ததிலேயே தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று பேசினார்.


சகப் போட்டியாளர்களை அவமதித்தும் கீழ்த்தரமாக நடத்தியும் கேவலமாக பேசியும் அந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை. அசீம் மாதிரி கேவலமாக தன்னால் பேசவும் முடியாது என்று மகேஸ்வரி காட்டமாக பேசினார். மேலும் தான் வெளியே வந்த பிறகு தன்னை வனிதா, அர்ச்சனா, ஜூலி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் எனக்கு ஒரு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருவதாகவும், மேலும் தன்னை பலரும் ஸ்டாராங் போட்டியாளர்தான் நான் வெளியே வந்ததும் பலரும் தன்னிடம் வருத்தங்களை கூறியதாகவும் மகேஸ்வரி சிரித்துக் கொண்டே கூறினார். Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Open Mic Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்