தமிழ் சினிமாவின் இப்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த படம் 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.
இவர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “மஹரிஷி” என்ற 2019ஆம் படத்திற்காக சிறந்த முழு பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். அதே பெரிய தயாரிப்பாளரும், விநோயிகிஸ்தருமான ‘தில்’ ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள விஜயும், “தில்” ராஜுவும் இயக்குனர் வம்சிக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளனர். குடும்பப்பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விஜயுடன் நிறைய தெலுங்கு நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்பொது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நாயகியான ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், காமெடி நடிகர் பிரமானந்தம், துணை நடிகர் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என நிறைய தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான, பரிட்சியமான முகங்கள் படத்தில் பலர் உள்ளனர். அவர்கள் போக தமிழ் ரசிகர்களுக்காக சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஷியாம் போன்றோரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.
இருப்பினும் படக்குழு அதனை குறித்து எந்த வித அச்சமும் இன்றி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்முரமாக நடந்து வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கொண்டு வர ஆயுதமாகி வருகிறது படக்குழு. அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியானது.
முதலில் வெளிவராயிருப்பது வாரிசு படமாக இருப்பினும் ரசிகர்கள் இன்னுமும் எதிர்பார்ப்பது விஜய் – லோகேஷ் படமே. மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துள்ளதால், ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.விக்ரம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பெரும்பாலும் லோகேஷ் தன்னுடைய முந்தைய படத்தில் பணிபுரிந்த டெக்னிக்கல் கலைஞர்களை உபயோகிக்க உள்ளார். அனிருதிற்கு பதிலாக இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைகிறார் என்ற பேச்சு நீண்ட காலமாகவே அடிபட்டுவருகிறது. எந்த ஒரு விஷயமும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் விஜயின் “வாரிசு” படத்தை விட விஜய் – லோகேஷ் படம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
இப்பொது அப்படத்தின் பெயர் குறித்த விஷயம் Wikipedia தளத்தில் கசிந்துள்ளது. படத்தில் எடிட்டராக விக்ரம் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜாவே இடம் பெறவுள்ளார். அவருடைய wikipedia பக்கத்தில் அடுத்தடுத்து அவர் பணிபுரியவுள்ள படங்களின் பெயர்களில் Thalapathy 67 as “naan vazhum ulagam” என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே இப்பொது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.