விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டைம்” என்னும் நிகழ்ச்சியை சிட்டி பாபு அவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கி புகழ். அதன் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை என பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட இவர் “அன்பு ஜெயிக்கும் நம்புறியா” என்ற வார்த்தை மூலம் மேலும் பிரபலமானார். பிக்பாஸுக்குப் பிறகு இவரை கலாய்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

இவருக்கு சாரா என்ற மகள் உண்டு. அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் சாராவும் இணைந்து தொகுத்து வழங்கினார். இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்த போதிலும் இவர்கள் இருவர் மீதும் நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.! இவர்கள் இருவரும் தங்கள் Youtube பக்கத்தில் வெளியிட்ட பாத்ரூம் Tour வீடியோ மிகப்பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ வெளியான பிறகு நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் கலாய்த்து எடுத்துவிட்டனர். அதன் பிறகு சில காலம் எந்த சர்ச்சரவிலும் சிக்காமல் இருந்து வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீ தமிழில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்தார் அர்ச்சனா. விஜய் தொலைக்காட்சியிலும் “தாயில்லாமல் நானில்லை” என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் சாராவும் தொகுத்து வழங்கினர். இந்த நிலையில் மீண்டும் அர்ச்சனா விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே தொகுத்து வழங்கி வந்த சூப்பர் மாம் நிகழ்ச்சியின் பார்ட் 2 வெளியாக இருப்பதால் மீண்டும் மகள் சாராவுடன் இணைந்தது அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும், விரைவில் அதற்க்கான ப்ரோமோ விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.