“அப்படி என்னதான் ஆச்சு…திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத Vj அர்ச்சனா”

வெளியிட்டது

திரை நட்சத்திரங்கள் போலவே சில நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் மிக பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளனர். அவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன், நட்சத்திர தொகுப்பாளினி DD, விஜய் டிவி பிரபலங்கள் மா.கா.பா., பிரியங்கா, இப்போதைய சினிமா பிரபல நடிகை பிரியா பவனி ஷங்கர் என அனைவருமே ஒரு காலத்தில் தொகுப்பாளராக தங்களது மீடியா வாழ்க்கையை துவங்கியவர்களே.

"அப்படி என்னதான் ஆச்சு...திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத Vj அர்ச்சனா" 1

ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில மொழி செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா. அந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபுவுடன் தொகுத்து வழங்கிபிரபலமானார். பின்னர் அதே சன் தொலைக்காட்சியில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்று இருந்தார்.

சிறுது காலத்தில் வெற்றிகாரமாக சென்று கொண்டிருந்த போதே கல்யாணம், குழந்தை என கலை துறையில் இருந்து விலகி இருந்த அர்ச்சனா, 2008ம் ஆண்டு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வந்து 2014ம் ஆண்டு வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.கலக்க போவது யாரு, வீடு மனைவி மக்கள், செலிபிரிட்டி கிச்சன், சரிகமப சீனியர்ஸ், ஜூனியர்ஸ் சீசன் 1 & 2 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் பல விமர்சனங்கள் பெற்றார்.

நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தன்னுடைய மகளுடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான டாக்டர் திரைப்படத்தில் அம்மா மகளாகவே நடித்து நல்ல பல விமர்சனங்களை பெற்றார். தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில்  தொகுப்பாளராக இருந்து வருகிறார் அர்ச்சனா.

தனியாக தான் மகளுடன் யூடியூப் சேனல் ஒன்றையம் நடத்தி வருகிறார். அதில், அர்ச்சனா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ பதிவிட்டிருந்தார். தனது மகள் சாரா கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்து கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பிறந்தநாளுக்கு ஏழு பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி ஸாரா கொடுத்து எமோஷனல் ஆக்கி இருக்கிறார். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Courtesy – IndiaGlitzT   amil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்