தமிழ் திரையுலகில் போராடி தற்போது தனக்கென ஒரு மிக பெரிய மார்க்கெட்டை இந்திய அளவில் உருவாக்கியுள்ளார் சண்டிகர் விஜய் சேதுபதி. தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவரை நடிக்க வைக்க கோடிகளில் சம்பளம் கொடுக்க பல பேர் இவரிடம் வருகின்றனர். ஆனாலும் நல்ல கதைகளை தேர்ந்துடுது சிறப்பாகவே நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன் என தமிழிலும் மாறி மாறி நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான இரண்டு படங்கள் “காதுவக்குல ரெண்டு காதல்” மற்றும் “விக்ரம்”. இரண்டு படங்களிலும் இருவேறு கதாபாத்திரங்கள். ஒன்றில் சாதுவான நல்ல காதலன் வேடம். விக்ரம் படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அனைவரையும் கொல்லும் வெறித்தனமான வில்லன் கதாபாத்திரம். இரண்டிலுமே வேறுவேறு விதமான கதாபத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
வில்லனாக இவர் நடிக்க தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என முக்கிய நான்கு நடிகர்களில் மூவருடன் இணைந்து மிரட்டிவிட்டுள்ளார். இப்பொது மீதம் இருப்பது தல அஜித் ஒருவரே. இந்த கூட்டணியை சேர்த்து படம் எடுக்கும் படி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது இன்னும் நிகழவில்லை.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும், 200 கிடக்கு மேல் வசூல் ஈட்டியது. இப்பொது இதே கூட்டணி நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகிய மூன்று முறையாக இணைந்து படம் எடுத்து வருகின்றனர்.
இதுல ஒரு வேடத்தில் அஜித் வில்லனாகவும், இன்னொரு கதாபாத்திரம் அவரே கதாநாயகன் என இரு பாத்திரங்களில் அடித்து வருகிறார். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக ஹைராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியை அணுகி கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அதற்காக முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இப்பொது சில ஹிந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனை முடித்தவுடன் தமிழில் மீதமுள்ள படங்களில் நடிக்க உள்ளார்.
ஹெச்.வினோத் கூறிய கதைக்கும் அவர் ஓகே சொன்னால் எப்படியும் இன்னும் 1 ஆண்டு கழித்தே இந்த படம் உருவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ சிறப்பான இயக்குனரான ஹெச். வினோத் மற்றும் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி இணைந்தால் படம் நிச்சயம் மிக பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.