தமிழ் திரையுலகில் போராடி தற்போது தனக்கென ஒரு மிக பெரிய மார்க்கெட்டை இந்திய அளவில் உருவாக்கியுள்ளார் சண்டிகர் விஜய் சேதுபதி. தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவரை நடிக்க வைக்க கோடிகளில் சம்பளம் கொடுக்க பல பேர் இவரிடம் வருகின்றனர். ஆனாலும் நல்ல கதைகளை தேர்ந்துடுது சிறப்பாகவே நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன் என தமிழிலும் மாறி மாறி நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான இரண்டு படங்கள் “காதுவக்குல ரெண்டு காதல்” மற்றும் “விக்ரம்”. இரண்டு படங்களிலும் இருவேறு கதாபாத்திரங்கள். ஒன்றில் சாதுவான நல்ல காதலன் வேடம். விக்ரம் படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அனைவரையும் கொல்லும் வெறித்தனமான வில்லன் கதாபாத்திரம். இரண்டிலுமே வேறுவேறு விதமான கதாபத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
வில்லனாக இவர் நடிக்க தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என முக்கிய நான்கு நடிகர்களில் மூவருடன் இணைந்து மிரட்டிவிட்டுள்ளார். இப்பொது மீதம் இருப்பது தல அஜித் ஒருவரே. இந்த கூட்டணியை சேர்த்து படம் எடுக்கும் படி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது இன்னும் நிகழவில்லை.
நடுவில் அறிமுக நாயகன் ஒருவருக்கும் தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். “உப்பென்ன” என்ற அந்த படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இப்பொது விஜய் சேதுபதி “மாநகரம்” படத்தின் ரீ-மேக்கீல் ஹிந்தியில் முனீஷ்காந்த் வேடத்தில் நடித்துள்ளார். அதுபோக ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார். விரைவில் மலையாள மொழியிலும் அறிமுகமாக உள்ள இவர், தமிழில் நடிகர் கார்த்தி-ராஜு முருகன் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தொடர்நது வில்லினாக நடித்தாலும் அது கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களே ஆகும். வெறுமனே சுற்றி திரியும் வில்லன் பாத்திரங்கள் இல்லை. இப்போதுஹ் மற்றொரு படத்தில் இவரை வில்லனாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற படம் “புஷ்பா”. இந்த முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டியது. கால்ஷீட் இல்லாத காரணத்தால் அதனை பகத் பசில் செய்தார். இப்பொது மிக பெரிய பட்ஜெட்டில் இன்னும் பிரமாண்டமாக உருவாக உள்ள “புஷ்பா 2” படத்தில் வேறொரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் உள்ளதால் அதில் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் சிலர் விஜய் சேதுபதியோ நம்ப இப்போதைக்கு எவளோ முடியுமோ அவ்ளோ கல்லா கட்டிட போதும் என்ற மனப்பான்மையில் இருக்கிறார் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு அறிய விஷயம் =. மக்கள் விஜய் சேதுபதியை பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் பார்த்து ரசிக்கவே ஆசைப்படுகிறார்கள் என்பதால் அவரும் அதனை முயன்று வருகிறார்.