“இனிமே எல்லா இடமும் விசலுதான்”!! புல்லட் பாடல் அடுத்து ட்ரெண்டாக வந்துள்ள விசில் பாடல்!! வாரியர் படத்தின் அடுத்த தெறிக்கவிடும் பாடல் வெளியீடு!!!

வெளியிட்டது

"இனிமே எல்லா இடமும் விசலுதான்"!! புல்லட் பாடல் அடுத்து ட்ரெண்டாக வந்துள்ள விசில் பாடல்!! வாரியர் படத்தின் அடுத்த தெறிக்கவிடும் பாடல் வெளியீடு!!! 1

பான் இந்திய படங்களின் மூலம் தமிழ் திரைக்கு வரும் அடுத்த தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி. தமிழ் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த படத்தில் ராமுடன் இணைந்து நடிகை கிருதி ஷெட்டி, ஆதி போன்றோர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் பொத்தினேனிக்கு பரிசாக இந்த டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.போலீஸ் அதிகாரியாக தோன்றும் ராம் கனகச்சிதமாக அந்த பாத்திரத்துக்கு பொருந்துகிறார். அரசியல் வில்லனாக வரும் ஆதி மிரட்டுகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு பாடிய புல்லட் சாங் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ராம் நல்ல வெற்றியை குறிவைத்துள்ளார். படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக அந்த பாடலில் வரும் கிருத்தி ஷெட்டியின் நடனம் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் படத்திலிருந்து “தடா தடா” என்ற பாடல் வெளியாகியிருந்தது. இன்னும் படம் வெளியாக 3 வாரங்களே உள்ள நிலையில் அப்படத்தின் அடுத்த பாடல் இப்பொது வெளியாகியுள்ளது. “விசில்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னுடைய கடைசி இரண்டு படங்கள் “அஞ்சான்” மற்றும் “சண்டக்கோழி 2” படத்தில் விட்ட வெற்றியை இந்த படத்தில் எப்படியேனும் பெற்று விட வேணும் என இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தில் கடினமாக உழைத்து வருகிறார். இவர் தமிழில் ஆனந்தம், சண்டக்கோழி, ரன், பையா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy – AdityaMusicTamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்