அனைத்து நிலைகளிலும் இந்திய அணி சீர்குலைந்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரிலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலின் முற்றிலுமாக சிதைந்து போயின. இத்தோல்வி குறித்து விராட் கோலி கூறுகையில், “அனைத்து அம்சங்களிலும் ஆஸ்திரிலியா அணி எங்களை நிலைகுலையச் செய்து விட்டது. நாம் சிறப்பாக ஆடாவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். போதிய ரன்களை எடுக்கவில்லை.
ஆஸ்திரிலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக மெத்தனப் போக்கில் ஆடக்கூடாது. எனினும் அடுத்த ஆட்டங்களில் இந்தியா எழுச்சி பெறும்.
எந்த வகையான ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால், அது நம்பிக்கையை தரும். எங்கள் வழக்கமான ஆட்டத்தை ஆட முடியாமல் ஆஸ்திரிலியா பந்துவீச்சாளா்கள் தடுத்து விட்டனா்.
ராகுல் சிறப்பாக ஆடினாா். நான்காவது நிலையில் நான் களமிறங்கினேன், ஒரு ஆட்டத்தில் தோல்விக்காக மக்கள் அச்சப்படத்தேவையில்லை” என்று கூறியுள்ளார்.