Categories: அரசியல்

மேற்கு வங்கத்தில் அரசுக்கு இணையாக மற்றொரு அரசு!ஆளுநர் மறுப்பு!!

வெளியிட்டது
மேற்கு வங்கத்தில் அரசுக்கு இணையாக மற்றொரு அரசு!ஆளுநர் மறுப்பு!! 1

மேற்கு வங்கத்தில் ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவி வகிக்கிறார். இவர் அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நடத்தி வருகிறார் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.இதற்கு தன்கர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே சிலிகுரி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , மேற்கு வங்காளத்தில் இணை அரசு ஒன்றை நடத்தி வருகிறேன் என கூறப்பட்டு இருந்தது.

அப்படி ஒரு இணை அரசை நான் நடத்தினால், விமான நிலையத்தில் இருந்து சர்க்யூட் ஹவுஸ் (சிலிகுரியில் உள்ளது) வரை என்னுடைய பேனர்களே இருந்திருக்க வேண்டும். ஆனால் முதல் மந்திரியின் பேனர்களையே நான் கண்டேன். அதனால் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் என கூறியுள்ளார் .

மேற்கு வங்காளத்தில் ஆளுநர் பொறுப்பேற்று 50 நாட்களை கடந்த நிலையில், தலைமை செயலாளருக்கு என்னை சந்திக்க நேரமில்லை. அரசியல் சாசனத்தின் கீழ் மாநில வளர்ச்சிக்கான விவகாரங்கள் பற்றி முதல் மந்திரி என்னிடம் விளக்கமளிக்க வேண்டும். அவற்றில் புல்புல் புயல் விவகாரமும் ஒன்று. இவை பற்றி விளக்கமளிக்க முதல் மந்திரிக்கு நேரம் கிடைக்கும் வரை நான் காத்து கொண்டிருக்கிறேன் என அவர் கூறினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்