அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உருமாறி இப்பொது வரையில் அந்த இடத்தை கெட்டியாக பிடித்து வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. 2005ஆம் ஆண்டு சரத்குமாரின் “ஐயா” படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், 17 வருடங்கள் கடந்து இன்றும் முக்கிய நாயகியாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.

தமிழ், தெலுங்கு முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கிட்டத்தட்ட 2 முறை அல்லது அதற்கு மேலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடுவில் சில காலம் தனிப்பட்ட வாழக்கை காரணமாக போராடினாலும் விட்ட இடத்தை ராஜா ராணி, கோலமாவு கோகிலா, மாயா, விஸ்வாசம், இமைக்க நொடிகள்,அறம் என வரிசை கட்டி ஹிட் படங்களாக கொடுத்து மீண்டும் பிடித்துக்கொண்டார்.
7 வருடங்களாக காதலித்து வந்த காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் கரம் பிடித்தார் நயன்தாரா. மிக பெரிய அளவில் பிரமாண்டமாக மஹாபலிபுரத்திலுள்ள தனியார் ரிசார்டில் நடைபெற்ற இந்த திருமண விழவே சென்ற ஒரு மாத காலமாக சோசியல் மீடியாவில் வைரல். 25 கோடிக்கு நெட்டபிலிக்ஸ் நிறுவனம் இவர்களுடைய திருமண விடியோவை ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டியிருந்தாலும், இப்பொது ஒரு மாதம் காலம் முடித்தும் எந்த வித அறிவிப்பும் அவர்கள் தரப்பில் வெளியாகவில்லை.
இந்நிலையில் தாய்லாந்து சென்று திரும்பியுள்ள நயன் மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக் கான் – அட்லீ “ஜவான்”, தெலுங்கில் சிரஞ்சீவியின் “காட்பாதர்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் “கோல்ட்” படம் தயாராகி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதே போல மீண்டும் ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்திலும், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ள நயன்தாராவின் “75வது” படமும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
இந்நிலையில் விக்கி – நயன் இருவரின் ரொமான்டிக் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தளத்தில் வெளியாகி வருகினறன. இயக்குனர் விக்னேஷ் சிவனே இவற்றை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகினறன.