“வியாபாரம் ஆகல போல….போட்ட திட்டம் ஃபிளாப்…வேற ரூட் பிடித்த விக்கி நயன்”!!

வெளியிட்டது

"வியாபாரம் ஆகல போல....போட்ட திட்டம் ஃபிளாப்...வேற ரூட் பிடித்த விக்கி நயன்"!! 1

கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டின் ஒரு பேச்சு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் செய்தியே. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்வு தான் 5 நாட்களாக ட்ரெண்டிங் நியூஸ். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஷாருக் கான், வசந்த்ரவி, விஜய் சேதுபதி,திலீப்,  இயக்குனர் மணிரத்னம், அட்லீ, கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடன இயக்குனர் பிருந்தா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தயாரிப்பாளர் போனி கபூர் என பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

அதாவது தனியார் OTT நிறுவனத்திற்கு ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுடைய திருமணம், மிகவும் நிறைய கட்டுபாடுகளுடன் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 60 பௌன்சர்ஸ் பாதுகாப்பு பணிக்காக அங்கே இருந்தனர். திருமணத்திற்கு வருபவர்களுடன் சாதாரணமாக அருகிலுள்ள பீச்சிற்கு வாக்கிங் சென்றவர்களுக்கும் கொஞ்சம் பிரச்சனை கொடுத்தார்கள் அவர்கள். இது அப்போதே கொஞ்சம் பிரச்சனையாக உருவானது.

இந்த நிலையில் வழக்குகள், விமர்சங்கள் பற்றி கவலை இன்றி நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளதாக சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் இது குறித்த பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார். தாய்லாந்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டியுள்ளார் அவர்.  பின்னர் சில புகைப்படங்களும் வெளியாகின. ஆனால்  கல்யாணத்தின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல்  இருந்தன.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்த இவர்கள் திருமணம்  25 கோடிக்கு வீடியோ வியாபாரம் நடந்தாக பல தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இப்பொது இவர்கள் திருமண முடிந்து 1 மாதம் காலம் முடிவடைந்த நிலையில் இப்பொது வரை இந்த வீடியோ எப்படி, எதில் வெளியாகும் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. சமீபத்தில் நடிகை நயந்தாரா விக்னேஷ் சிவன் திருமண பொது எடுக்கப்பட்ட போட்டோக்கள் ஒவ்வொன்றாக இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வருகிறார். இதற்கு திருமண வீடியோ வியாபாரம் ஆகாத நிலையில் தான் இருவரும் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்