விப்ரோ நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சி!

இந்தியாவின் தகவல் தொழிநுட்ப துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ தனது மூன்றாம் காலாண்டில் ரூ.2,456 கோடி அளவிற்கு இழப்பினை சந்தித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வருவாய் விவரங்களை வெளியிட்டிருந்தது. 2019 அக்டோபர் – டிசம்பரில் இன்ஃபோசிஸின் லாபம் ரூ.4,466 கோடியாக அதிகரித்தது.

2018ஆம் ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.3,610 கோடி லாபம் ஈட்டியது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.9 சதவீத வளர்ச்சியுடன் ரூ.23,092 கோடியாக உயர்ந்தது.

இதே போல், விப்ரோ நிறுவனமும் தனது வருவாய் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சி! 1
விப்ரோ

அதில், நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,470.5 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.15,059.5 கோடியுடன் ஒப்பிடும்போது 2.7 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.2,510.4 கோடியிலிருந்து 2.17 சதவீதம் குறைந்து ரூ.2,455.9 கோடியானது என பங்குச் சந்தையிடம் விப்ரோ தெரிவித்துள்ளது.

வருமான நிதி நிலை முடிவுகள் குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான அபிதலி இசட். நீமுச்வாலா கூறுகையில், “தகவல்தொழில்நுட்ப சேவைகளின் மூலமாக பெறும் வருவாய் மாா்ச் காலாண்டில் 209.5 கோடி டாலா் முதல் 213.7 கோடி டாலா் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் வளா்ச்சி 2.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்