Categories: வைரல்

கரடி கடிச்சு உதடு மூக்கு மூஞ்சி எல்லாம் பிஞ்சு போச்சு..கரி சித்தம்மாவின் சோக கதை | Kari Chithamma

வெளியிட்டது

இந்த உலகம் பல விசித்திரமான மனிதர்களை கொண்டது. பல விசித்திரமான நிகழ்வுகள், விசித்திரமான விலங்குகள், வித்தியாசமான காட்சிகள் என நாளும் ஒரு விசித்திரம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆம் அப்படிப்பட்ட வித்தியாசமான தன்னம்பிக்கை மனிதர்களில் ஒருவர்தான் கரடி சித்தம்மா. பெங்களூரில் பிறந்த வளர்ந்த அவர் 7 வயது குழந்தையாக இருந்தபோது கரடி கடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சித்தம்மா.

கரடி கடிச்சு உதடு மூக்கு மூஞ்சி எல்லாம் பிஞ்சு போச்சு..கரி சித்தம்மாவின் சோக கதை | Kari Chithamma 1

தான் ஏழு வயது குழந்தையாக இருந்த போது தனது தாய் தந்தையுடன் பூ பறிக்க சென்றுள்ளார் சித்தம்மா. அப்போது பாலப்பழத்தை உண்ண பலாப்பழ தோட்டத்திற்கு வந்த கரடி ஒன்றில் புதரில் குட்டிப் போட்டு அதிலேயே இருந்துள்ளது. சித்தம்மா தெரியாமல் அந்த புதரின் அருகே செல்ல பாய்ந்து வந்த கரடி அவரின் கண்கள் மற்றும் முகத்தை தனது கூரிய நகங்களால் கிழித்து உள்ளது. இதனால் கண்கள் முகப்பகுதிகள் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் முகம் சற்று சீரமைக்கப்பட்டது. பல சோதனைகளைத் தாண்டி சித்தம்மா கல்லூரி படிப்பில் எம்.ஏ சோஷியாலஜி நிறைவு செய்துள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods.

கரடி தன்னை கடித்ததால் தான் தன்னால் படிக்க முடிந்தது என்றும், அமெரிக்காவில் 19 மாகாணங்களில் 15 பல்கலைகழங்களில் சென்று பேசியுள்ளதாகவும் சித்தம்மா குறிப்பிட்டுள்ளார். தான் முகம் சிதைந்து இருந்த போது அவரின் தந்தையார் ஊசி போட்டு அவரை கொன்று விட சொன்னதாகவும், உறவினர்கள், பள்ளி நண்பர்கள் அவரின் உருவத்தை கேலி செய்து வெறுத்ததாகவும் சோகத்துடன் கூறினார். ஆனால் என் தாயாரால் எனக்கு கொடுக்கப்ட்ட படிப்பு மட்டுமே இன்று என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்று பெருமை கொள்கிறார் சித்தம்மா. இன்று சென்னையில் தனது கணவர், மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தன்னம்பிக்கை மிக்க சித்தம்மாவின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்