“படத்துல சண்டை இல்ல.. சண்டைல தான் படமே இருக்கு”!! யானை படத்தின் நியூ ப்ரோமோ வீடியோ!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் 1995ஆம் ஆண்டே நடிகராக “முறை மாப்பிள்ளை” படம் மூலம் நடிகர் அருண் விஜய் அறிமுகமானாலும் பல வருட போராட்டங்களை சந்தித்தே இன்று மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நடிகராக வலம் வருகிறார். முறை மாப்பிள்ளை படம் பிறகு அவர் பல படங்கள் நடித்தாலும் சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண், ரஞ்சித், மனோரமா, சார்லி என பலர் நடித்திருந்த படமான “பாண்டவர் பூமி” படமே மக்கள் மத்தியில் அறிமுகத்தைத் இவருக்கு கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

"படத்துல சண்டை இல்ல.. சண்டைல தான் படமே இருக்கு"!! யானை படத்தின் நியூ ப்ரோமோ வீடியோ!! 1

2000ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகு மீண்டும் சில தோல்விப்படங்கள். நடுவில் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான “இயற்கை” படம் மூலம் நல்ல விமர்சனத்தை பெற்றார். இருப்பினும் நினைத்த பிரேக் கிடைக்கவில்லை. போராடி கொண்டிருந்த அவருக்கு 2009ஆம் ஆண்டு வெளியான “மலை மலை” படம் ஓரளவு வெற்றியை கொடுத்தது. பிரபு, வேதிகா, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி, சந்தானம், கஞ்சா கருப்பு என பலர் நடித்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான இந்த படம்  B & C சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் இதே கூட்டணி “மாஞ்சா வேலு” திரைப்படத்தில் இணைந்தது. அந்த படமும் ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்தது. பின்னர் வெளியான “தடையற தாக்க” படம் இவர்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த போதிலும் படம் தோல்வியாகவே அமைந்தது. மிக பெரிய ஒரு வெற்றிக்காக அல்லாடி கொண்டிருந்த அருண் விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். 2015ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் உருவான “என்னை அறிந்தால்” படத்தில் முதல் முறை வில்லனாக உடலை மிகவும் பிட்டாக்கி “விக்டர்” கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.

உண்மையில் 1995ஆம் ஆண்டு நடிக்க வந்த அருண் விஜயின் சினிமா வாழ்வில் மிக முக்கிய அமைந்தது என்னை அறிந்தால் படமே. இதற்கு அடுத்து தெளிவாக நடித்த “குற்றம் 23”, “செக்க சிவந்த வானம்”, “தடம்” போன்ற படங்கள் மிக சிறப்பான வெற்றியை இவருக்கு கொடுத்தன. இப்பொது இயக்குனர் ஹரியின் “யானை” படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி என பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்த டீஸர் வெளியாகியுள்ளது. சிறப்பான ஆக்ஷன் ஹீரோவாக மாற முயன்று கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்க்கு இந்த படம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Courtesy – Drum Sticks Productions

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்