Categories: சினிமா

பாண்டியர்கள் வரலாறை சொல்லும் யாத்திசை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.!

வெளியிட்டது

இன்று அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் யாத்திசை. இந்த படம் குறித்த முழு விமர்சனங்களை தற்போது பார்க்கலாம். ஏழாம் நூற்றாண்டின் பாண்டிய அரசாக இருப்பவர் அரிகேசரி. இவரது மகன் பரணதீரன். வலிமையாக இருக்கும் இந்த பாண்டிய அரசர்களை எதிர்த்து சேரர்கள் போரிட்டு வருகின்றனர். சேரர்களுக்கு உறுதுணையாக சோழர்கள் மற்றும் எயினர்கள் என்று அழைக்கப்படும் பழங்குடியின சிறு குழுக்களும் இணைந்து போர் புரிந்து வருகிறார்கள். இந்த போரை அரிகேசரியின் மகனான ரணதீரன் வழிநடத்தி செல்கிறான். போரில் பாண்டியர்களின் படை மிகப்பெரிய வெற்றி அடைகிறது. இதனால் பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்ட சேரர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த சோழர்கள் காட்டிற்குள் தலைமறைவாகின்றனர். மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த எயினர் குழுவினரும் பாலை நிலத்திற்கு விரட்டப்படுகிறார்கள்.

பாண்டியர்கள் வரலாறை சொல்லும் யாத்திசை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! 1

இந்த எயினர் குழுவை சேர்ந்த வீரனாக இருக்கும் கொதி என்பவன் மீண்டும் தனது படையை திரட்டி திரட்டி கொண்டு சோழர்களின் உதவியுடன் ரணதீரனை எதிர்த்து போரிட முடிவு செய்கிறான். இறுதியில் ரணதீ்னை எயினர் குழுவின் தலைவனாக இருக்கும் கொதி வென்றானா? பாண்டிய பேரரசு வீழ்ந்ததா? பின்பு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. பண்டைய கால பேரரசு மற்றும் வரலாற்று கதைகள் என்றாலே அதிகாரத்தை அடையத் துடிக்கும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் அல்லது இரண்டு பெரும் பலம் பொருந்திய அரசப் படைகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளாக மட்டுமே வரலாற்று புனைவு படங்கள் காட்சிப்படுத்தப்படும். ஆனால் எயினர் குடி என்ற சிறிய பழங்குடியினர் அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து போராடி அதிகாரத்தை பெற்றனரா? என்கிற ஒற்றை வரியை கொண்டு பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதை சாதித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.


அரசுகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் அதிகாரம் என்றைக்கும் மாறாதது என்கிற உண்மையை ஆணித்தரமாக நிறுவ முயற்சித்திருக்கிறார் இயக்குனர். கதையின் பிரம்மாண்டமும் அதற்கு ஏற்ற காட்சி அமைப்பும், அதை பதிவு செய்த விதமும் கதைக்களத்தை இன்னும் சுவாரசியமாக்கி கொண்டே இருக்கின்றது. பல்வேறு இனக் குழுவை சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், அவர்கள் வாழும் நிலப்பரப்பு, வீட்டு அமைப்பு, அவர்கள் பயன்படுத்தும் மண் பாத்திரங்கள், அவர்கள் சாப்பிடும் உணவுகள் என்று ஒவ்வொரு காட்சி அமைப்புகளும் நம்மை படத்தோடு ஒன்றிப் போக உதவுகிறது. குறிப்பாக எயினர் குலத்தின் கொற்றவை கடவுளாக இருக்கும் கொற்றவைகளுக்கு நடக்கும் சடங்குகள், உயிர் பலி கொடுக்கும் முறை தன்னைத்தானே பலி கொடுக்கும் அரிக்கண்டம் நவகண்டம் போன்ற முறைகளை காட்சிப்படுத்திய அமைப்பு, கூடவே பழம் தமிழரின் மொழியை கையாண்டுள்ள விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியதாக இருக்கிறது.


தேவரடியார் வாழ்க்கை முறையில் நடக்கும் அவலங்கள், ஆணாதிக்க சமுதாய முறை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருந்த விதம் கவனிக்க வைக்கிறது. ரணதீரனாக சக்தி மித்திரனும் கொதியாக சோயோனும், அவர்களது இறுதி சண்டை காட்சிகளும் அறிமுக நடிகர்கள் என்று நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. அகிலேஷ் காத்தமுத்துவின் பிரம்மாண்ட ஒளிப்பதிவு படத்திற்கு மென்மேலும் அழகிகளை கூட்டுகிறது. போர் காட்சிகளை படமாக்கி இருக்கும் விதம் உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் சிஜி காட்சிகள் வெளிப்படையாக தெரிந்த போதிலும் அதை பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு தான் இருக்கிறது. எயினர் சமூகத்தினர் பேசும் வழக்கில் இல்லாத மொழியை பதிவு செய்திருப்பது கதைக்கு கொஞ்சம் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பேசும் காட்சிகளில் ஒவ்வொரு முறையும் கீழே ஓடும் சப்டைட்டில் பார்த்து தான் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அது மட்டும் படத்திற்கு குறையாக இருக்கிறது முதல் பாதி மெதுவாக சென்றபோதிலும் இரண்டாவது பாதி விறுவிறுப்பைக் கூட்டி படத்தை சுவாரசியமாக்குகிறது.


படத்தில் சில குறைகள் இருப்பினும் அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, குறைந்த பட்ஜெட்டில், எளிமையான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் முன் பெரிய அனுபவம் இல்லாத இந்த படத்தை இயக்கி இருக்கும் தரணி ராஜேந்திரனுக்கு தனி பாராட்டுக்கள். சோழர்களுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் இந்த படம் சோழர்களை மிஞ்சி செல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங்..! 3.75/5

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்