Categories: சினிமா

பழங்குடிங்களை வெறிகொண்டு வேட்டையாடும் பாண்டியர்கள்.! யாத்திசை படத்தின் ட்ரைலர் இதோ..!

வெளியிட்டது

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி பலவகையான படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக பாண்டியர்களைப் பற்றி யாத்திசை என்கிற ஒரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சுமார் 35 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இயக்குனர் தரணி சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் யாத்திசை. இந்த படம் முழுவதும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, செம்மலர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்தி குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய இளவரசனாக இருக்கும் ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைப்பாளராகவும், அகிலேஷ் காத்தமுத்து மற்றும் யதிஷாய் என்கிற இருவர் ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றி இருக்கின்றனர். ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடிங்களை வெறிகொண்டு வேட்டையாடும் பாண்டியர்கள்.! யாத்திசை படத்தின் ட்ரைலர் இதோ..! 1

இந்தப் படத்தை வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய இளவரசனாக இருக்கும் ரணதீரபாண்டியனுக்கும், எயினர்கள் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நவகண்டம் என்று அழைக்கப்படும் தன்னைத்தானே பலிக் கொள்ளும் முறை, கொற்றவைக்கு பலி கொடுக்கும் முறை, தேவரடியாரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து இந்த படம் விரிவாக பேசுகிறது. படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய பிரபலங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


சுமார் 3.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று youtube டிரெண்டிங்கிலும் இந்த ட்ரெய்லர் இடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் யாத்திசை படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டு இருக்கிறது. சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது் நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Embed Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்