தன் ரசிகையின் தலையில் கை வைத்து தள்ளிய பாடிகார்டை யாஷ் தலையில் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ஒரு நடிகர்தான் யாஷ். கேஜிஎஃப் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. பெங்களூருவில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார். பின்பு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று தனது கடின உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் புகழின் உச்சியில் இருக்கிறார் யாஷ். வீடியோ கீழே உள்ளது

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது கேஜிஎஃப் தான்.. இந்த படத்தில் கோர்ட் சூட்டுடன் மாஸாக தோன்றுவார் யாஷ். மிரட்டலான நடிப்பும், நேர்த்தியான தேகமும் கதாபாத்திரத்துடன் ஒன்றி போயிருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் முதல் பாகம் அமைந்து இருந்தது. இரண்டாம் பாகம் வெளியாகி நைட் ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடிக் கொண்டிருந்தது. இந்த பாகத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற செய்தியோடு படம் முடிகிறது.. Youtube Video Code Embed Credits: Galatta
தற்போது யாஷின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் ரசிகர்கள் வரிசையாக வந்து யாஷிடம் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அப்போது யாஷின் பாடிகார்ட் ஒருவர் ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து தள்ள டென்ஷன் ஆன யாஷ் அந்த பாடிகார்ட் தலையில் அடித்து அதட்டுகிறார். இதை் பார்த்த யாஷின் ரசிகர்கள் பெண்கள் மீதும், ரசிகர்கள் மீதும் இவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறாரே என்று கமெண்டுகள் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video.