Categories: அரசியல்

எடியூரப்பா இராஜினாமா செய்வார்: சித்தராமையா!

கருநாடகவில் நடைபெறப்போகும் இடைத்தேர்தல்களின் விளைவாக எடியூரப்பா முதலமைச்சர் பதிவிலிருந்து விலக்கப்படுவார் என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடுமுழுவதும் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அரசியல் மூத்த தலைவர்கள் பலர் தோல்வியை தழுவினர்.

பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இதனை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர், “மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகளை போலவே கர்நாடக இடைத்தேர்தலில் நடந்தேறாது. குறைபாடுகள் உள்ளவர்களை மக்கள் தோற்கடிப்பார்கள். குஜராத் இடைத்தேர்தல்களின் முடிவு இதனை தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

எடியூரப்பா இராஜினாமா செய்வார்: சித்தராமையா! 1

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த 17 எம்.எல்.ஏகள் குமாரசாமி ஆட்சியில் கட்சி தாவல் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

“வரும் இடைத்தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம். அதன் விளைவாக எடியூராப்பா தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய நேரும்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்றத்தின் கட்சிகள் எண்ணிக்கை:
பாஜக: 105
பாஜக ஆதரவு சுயேட்சை: 01
காங்கிரஸ்: 66
ஜே.டி.எஸ்: 34
பி.எஸ்.பி: 01 (சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது)

தற்போது அமைந்திருக்கும் பாஜக தலைமையிலான எடியூரப்பா ஆட்சிக்கு பெரும்பாண்மை இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஆட்சி அமைக்க 112ஆக எண்ணிக்கை உயரும். அதன் அடிப்படையில் பாஜகவிற்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏகள் தேவைப்படும்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்