Categories: சினிமா

ஓவியாவுடன் சேர்ந்து காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கும் யோகி பாபு.! ‘பூமர் அங்கிள்’ ட்ரைலர்.!

வெளியிட்டது

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக வாழ்க்கைய ஆரம்பித்தவர் பாபு. பின்னர் அவர் ‘யோகி’ என்ற படத்தில் நடித்த பின்பு ‘யோகி பாபு’ என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர் அன்று தொடங்கி அவர் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் ‘மான் கராத்தே’ தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்தார். அதன் பின்னர் இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓவியாவுடன் சேர்ந்து காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கும் யோகி பாபு.! 'பூமர் அங்கிள்' ட்ரைலர்.! 1

தற்போது அவர் கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். ‘பூமர் அங்கிள்’, ‘அயலான்’, ‘பூச்சாண்டி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘பூமர் அங்கிள்’ படத்தின் படபிடிப்புக்கள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து பிக பாஸ் புகழ் ஓவியாவும் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.எஸ்.சுவதீஷ் இயக்கி இருக்கிறார். தர்ம பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்கா மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதில் ஏஜெண்ட் நேசமாக யோகி பாபுவும், ஏஜெண்ட் வேம்புலியாக ரோபோ ஷங்கரும் நடித்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. தற்போது மீண்டும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண..! Watch the Below Video..!

YouTube Video Code Embed Credits: MRT Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்