யோகிபாபு தனது மகள் ‘பரணி கார்த்திகா’வின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அந்த நிகழ்ச்சிக்கு சூர்யா, கார்த்தி, விஷால், குஷ்பூ, உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ஏஎல் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் டிவியில் ‘லொள்ளு சபா’ என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை ஆரம்பித்தவர் பாபு. அவர் முதன்முதலாக ‘யோகி’ என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக ‘யோகி பாபு’ என்று அழைக்கப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது யோகி பாபு ‘அந்தகன்’, ‘அயலான்’, ‘சுந்தரா டிராவல்ஸ் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘குய்கோ’ படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. ‘கூர்கா’, ‘தர்ம பிரபு’, ‘மண்டேலா’ போன்ற படங்கள் யோகி பாபு ஹீரோவாக நடித்த சில படங்களாகும்.
மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ என்கிற படத்தின் மூலமாக சினிமாவில் புதிய உயரத்தை எட்டினார். இதனால் இவருக்கு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்து முடித்துள்ளார்.
யோகி பாபுவின் குடும்பத்தை பொறுத்தவரை அவருக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவியை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.
இந்த தம்பதிகளுக்கு 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘விசாகன்’ என்று பெயர் வைத்தார் யோகி பாபு. முருக பக்தரான அவர் முருகனின் பெயரை சூட்ட வேண்டும் என்பதால் இந்த பெயரையே வைத்திருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு மஞ்சு பார்கவி தம்பதிகளுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கும் முருகன் பெயரில் ‘பரணி கார்திகா’ என பெயர் வைத்துள்ளார்.
தனது மகளின் முதல் பிறந்தநாளை இந்த விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, குஷ்பூ, இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பலரும் பரணி கார்த்திகாவுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.