பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபுவிற்கு தற்போது தீண்டாமை கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவில் ஒன்றிற்கு சென்று அவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் யோகி பாபு. தற்போது கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் பணியாற்றி இருக்கும் யோகி பாபு தற்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான அவர்,தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாவீரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் யோகி பாபுவின் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தனர் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தார். சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டதாகவும் ரசிகர்கள் யோகி பாபுவின் காமெடி பற்றி கூறி இருந்தனர். இந்த நிலையில் கைவசம் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கைவசம் ஜவான், அயலான், கங்குவா, அரண்மனை 4, சதுரங்க வேட்டை பாகம் 2, அந்தகன், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள், விஷால் 34, வானவன் போன்ற படங்களில் நடித்த வருகிறார். குருவாயூர் அம்பலண்டையில் என்கிற மலையாள படத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். இந்த நிலையில் யோகி பாபுவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தீவிர முருகன் பக்தராக இருக்கும் அவர் பழனி, திருச்செந்தூர் போன்ற கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுபோல சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்ற யோகி பாபு, அங்கு தரிசனம் செய்துவிட்டு ரசிகருடன் செல்ஃபிகளும் எடுத்துக்கொண்டார். பின்னர் அர்ச்சகர் ஒருவரிடம் சென்று கை கொடுக்க வேண்டும் சென்றார். ஆனால் யோகி பாபுவிற்கு கை கொடுக்க மறுத்து அர்ச்சகர் கையை காட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் யோகி பாபுவுக்கு கூட இப்படி தீண்டாமை நடந்து விட்டது என்று சொல்லி ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O