தமிழ் இசை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரின் மெலடி பாடல்கள், காதல் பாடல்களை கேட்டாலே மனதிற்குள் ஏதோ ஊடுருவியது போல இருக்கும். அவர் தற்போது மெக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த படங்களை யுவனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா 1997 ஆம் ஆண்டு அரவிந்த் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். 1999 இல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இசையமைத்தன் மூலமாக பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். 1999ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி மிகப் பெரியதாக இருந்தது. அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இசை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாப்ஃரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு சுஜா என்னும் தனது தோழியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு திருமணமும் கசந்ததால் 2014 ஆம் ஆண்டு முஸ்லிமாக மதம் மாறி ஜாப்ஃரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஸியா யுவன் என்ற மகளும் உள்ளனர். மதம் மாறிய பிறகு தனது பெயரை அப்துல் காலிக் என்றும் மாற்றிக் கொண்டார். இருந்த போதிலும் படங்களில் யுவன் சங்கர் ராஜா என்கிற பெயரையே பயன்படுத்தி வருகிறார்.
தற்போது யுவன் இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா யாத்திரைக்கு சென்று இருக்கிறார். இஸ்லாமியர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் தனது வாழ்வில் அடைய நினைக்கும் ஒரு பேறாக மெக்கா பயணத்தை கருதுகின்றனர். தற்போது யுவனும் மெக்காவிற்கு புனித பயணத்திற்கு சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. மெக்காவிற்கு யுவன் சென்றது ஹஜ் யாத்திரை இல்லை. இது உம்ரா என்று அழைக்கப்படும் யாத்திரை என கூறப்படுகிறது. மெக்காவிற்கு செல்பவர்கள் முன்பே பதிவு செய்து சென்று வருவார்கள். ஹஜ் கமிட்டியில் பதிவு செய்து மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். அப்படி சென்று வந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது யுவன் தனியாக விரதம் இருந்து மெக்கா மதினாவுக்கு சென்று தொழுகை நடத்தி வந்துள்ளார். இது ஹஜ் புனித கடமையாக சேராது. இது உம்ரா என்று அழைக்கப்படும். யுவன் தற்போது இந்த முறையில் உம்ரா யாத்திரை சென்று வந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை அவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.